மீன்கள் பாடிய தேசமொன்றில் படித்து திரிந்த போது...
இலங்கையின் மிகப் பழமையான கல்லூரியில் பயின்ற கலமும் மட்டக்களப்பு மண்ணில் சுற்றித்திரிந்த நாட்களும் இப்போது நிறைய நிறைய நினைவுக்கு வருகிறது.என்னை போலவே இன்று உலகம் முழுவதிலும் சுற்றிக் கொண்டுதிரியும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஊற்றான எனது கல்லூரி குறித்து இணையங்களில் அவ்வளவு அதிகமாகக் காணக் கிடைக்கவில்லை.
எனது இந்த பதிவின் நோக்கம் அன்றைய எனது பொழுதுகளையும் நண்பர்களையும் சம்பவங்களையும் மீட்டிக் கொள்ளுவது.
அத்தோடு மட்டக்களப்பு பற்றிய தகவல்கள் சேதி களைச் சொல்லுவதும்.
சீமைப் பனைகள்,வாவியோரத்து இருக்கைகள், முற்றவெளி,காதல் வீதி ,கிழங்குக் கடைகள்(உலகில் எங்கு தேடியும் கிடைகாத அற்புத்க் கடைகள் இது பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம்.)என்று பள்ளிக்காலத்தில் துள்ளிதிரிந்த இடங்களை எவன் மறப்பான்.
இந்த பதிவினைப் பார்க்கும் நிறைய பேருக்கு மட்டக்களப்பைத் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருகிறது.இலங்கையின் கிழக்கு பகுதியில் அல்லது தமிழீழத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கும் கடலும் கடல்நீரேரியும் சூழ்ந்த மீன்கள் துள்ளிவிளையாடும் அழகான நகரம்.ஒரு காலத்தில் பாடித்திருந்த மீன்களின் பட்டைக் கேட்டதாக எமது கல்லூரி முன்னாள் அதிபர் காசிநாதர் எழுதியுள்ளார்.இப்போது அந்தப் பாட்டை கேட்க முடியவில்லை.
மட்டக்களப்பை விட்டு நிறையத்தூரம் வந்த பின்னர்தான் அதன் அழகு தெரிகிறது. எனக்கு தெரிந்து இலங்கயில் உள்ள அழகான நகரங்களுக்குள் மட்டக்களப்பை முதல் வரிசையில் வைக்க முடியும்.
கவிதையில் காசி ஆனந்தன்,சினிமாவில் பாலு மகேந்திரா என்று நமக்கு நெருக்கமாக
இப்போது இருபவர்கள் முதல் இலங்கை பத்திரிகையுலகில் குறிப்பிடத்தகுந்தவர்களான எஸ்.டி.சிவநாயகம் , த.சிவராம் என்று தொடங்கும் நீண்ட பரம் பரியமும் முதலில் மத்திய கல்லூரியிலும் பின்னர்
புனித மிக்கேல் கல்லூரியிலும் படித்த சுவாமி விபுலானந்த அடிகள் முதல் வீ.சீ.கந்தையா ,F.X.C.நடராசா அடங்கலாக தமிழ்,இலக்கிய,வரலாற்றுப் பாரம் பரியத்தைக் கொண்ட பலரை தந்த பூமி மட்டக்களப்பு.
இலங்கயின் முதல் பாடசாலைகளுள் ஒன்றாக 1814 இல் ஆரம்பிக்கபட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மட்டுநகரின் சிறப்புகளில் ஒன்று.அந்த மண்ணில் வளர்ந்த பயின்ற நாம் அந்தச் சிறப்புகளில் இருந்தே எமது பயணத்தை தொடங்கினோம்.
மட்டக்களப்ப பத்தி இன்னும் நிறய சொல்லித்தே இரிக்கலாம். மறுகா எழுதுரதுக்கு இடம்பத்தாம போயிரும்.
அதால, அடுத்த இடுகைகளில்
பல்வேறு தகவல்கள் சுவாரஷ்யமான செய்திகளோடு சந்திப்போம்.
என் இனிய மத்திய கல்லூரி நண்பர்களே நீங்களும் இணைந்து கொள்ளூங்கள்
7 Comments:
சோமிதரன்,
பழமையான கல்லூரி (193 ஆண்டுகள் )உங்களுடையது. பிரின்ஸ் சேரைப் பற்றி அண்ணா கதை கதையாய்ச் சொல்வார். அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றிப் பதிவிட்டிருக்கிறேன்.
www.batticaloa.com ஒருவேளை பயன்படக்கூடும். மத்தியகல்லூரிக்கென்றே அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் இருக்கிறது, ஆனால் முகவரி மறந்துவிட்டேன். கேட்டு அனுப்புகிறேன்.
-----------------------------
முடிந்தால் எனக்கொரு தனிமடலிடுங்கள். mazhaipenn.shreya at gmail dot com
தென் தமிழீழ நடப்புக்கள் பதிவாக வருவது குறைவு உங்கள் பதிவில் இன்னும் எதிர்பார்க்கின்றேன்
வருகைக்கு நன்றி பிரபா,
மழை உங்களுக்கு நான் தனிமடலனுப்புகிறேன்.காசிநாதர் பற்றிய உங்கள் பதிவு பார்த்தேன்.அவர்ப் பத்தி நிறய கதைகள் இருக்கு.கண்டிப்பில பேர் போன ஆள் எண்டு சொல்லுவாங்கள். அவர் விடைபெறும் காலத்தில்தான் நான் மத்திய கல்லூரியில் சேர்ந்தேன்.அனால் பின்னர் அடிக்கடி சந்தித்ததுண்டு.
சோமி!
நான் ஒரே தரம் மட்டுநகர் வந்துள்ளேன்; இவற்றை யெல்லாம் பார்த்ததாக ஞாபகம் இல்லை.
உங்கள் பதிவால் அறிகிறேன்;
யோகன் பாரிஸ்
Thank you Johan anna.
i ll write about more experence of batticaloa.
சோமி, மட்டக்களப்பில் 6 மாதங்கள் பல்கலைக்கழகக் கல்லூரியில் இருந்த அந்தக்காலம் மறக்க முடியாதது.
நீங்க சொல்லித்தே இரிங்க. நாங்க கேட்டுக்கிட்டே இரிக்கிரம்.
உங்கள் பதிவு என்னுடய பழைய கால நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது. நீங்கள் சேர்ந்த அதே வருடமே நானும் உங்கள் சகோதர பாடசாலையில்(Vincent) யாழிலிலிருந்து வந்து சேர்ந்தேன். Dushy
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home