மட்டு நகரும் மத்திய கல்லூரியும்.........

நான் விளையாடிய கடற்கரை. . .

இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இந்த மண்ணில் எத்தனை கதைகள் எவ்வளவு விளையாட்டுக்கள். ஒவ்வொரு பௌர்ணமியிலும் கூட்டமாக நண்பர்களோடு அரட்டையடடித்த, குளித்துமகிழ்ந்த கடற்கரை.கல்லடிக் கடற்கரைக்கு போகாத மட்டுநகரவாசிகள் மிகக் குறைவு.2004 சுனாமிப் பேரலை வருவதற்கு முன்புவரை மகிழ்விக்குமிடம் இப்போது மரணித்துப் போனவர்களின் நினைவுகளைத் சுமந்தபடி . . .

இலங்கையின் கிழக்குப் பகுதி கடற்கரைகளில் அழகுக்கு பஞ்சமிருக்காது.மட்டக்களப்பு நகரில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் கல்லடிக் கடற்கரை தினமும் சுறுசுறுப்பான இடம்.அருகே இருக்கும் இலங்கை இராணுவத்தின் பாரிய முகாமைத் தவிர இந்த கடற்கரைக்கு வேறு தொல்லைகள் எதுவும் இல்லை.மட்டக்களப்பில் இராணுவம் பயிற்சி எடுக்கும் பிரதான முகாம் இங்குதான் உள்ளது. ஒவொரு நாளும் பல மனி நேரம் கடலை நோக்கி அவர்கள் சுடுகிற சத்தம் காதடைக்க வைக்கும்.இதனால்தான் என்னவோ கடலுக்கு கோபம் வந்து ஏராளமான இராணுவத்தினரையும் சேர்த்து 2004 டிசம்பர் 26 ல் பலிவாங்கியிருகிறது.
இந்த இராணுவ முகாமில்தான் 90களிலும் அதற்கும் முன்பும் ஏராளமான தமிழ் போராளிகள் சிறை வைக்கப் பட்டிருந்தார்கள் பல இளைஞர்கள் கொலை செய்யப் பட்டதும் இந்த முகாமில் வைத்துத்தான்.மட்டக்கள்ப்பு முகத்துவாரத்தில் இருந்து தொடங்கும் நீணடகடற்கரை பொத்துவில் வரை நீண்டு செல்கிறது. இந்த நீண்ட பகுதியின் மிக அழகான மக்கள் இளைப்பாறூம் கடற்கரைப் பகுதியே கல்லடி கடற்கரை

இந்த கடற்கரையில் ஒரு மாதா கோயில் இருந்தது செவ்வாய்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தப் படும். நாம கண்டிப்பா ஞாயிற்றுகிழமை போவம் அப்பதான் நிறய கூட்டம் வரும்.( நிறையப் பொம்பிளப் பிள்ளையளும் வரும்...ஹி...ஹி..)மறுகா அங்க நாவலடி ரோட்டில இருகிற கிழங்கு கடையில் கிழங்கு வாங்கித்து கடற்கரையில இரிந்தமெண்டா ஆமிகாரன் வீட்ட பொக சொல்லும் வரைக்கும் அங்கதான் கிடப்பம்.(அப்பப்ப மட்டக்களப்பு தமிழ் சொல்லுறன் முழுதையும் பேச்சுவழக்கில எழுதினா நிறயப் பேருக்கு புரியாது.)



(மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் மாதா கோவில் சுனாமி நடந்த மறுவாரத்தில் இந்த எடுத்தது.)

[மட்டக்களப்பு கிழங்கும் பாபத்தும் பிரபல்யமான மாலை நேர சிற்றூண்டிகள் இன்னுமோரு பதிவில் அவற்றைப் பற்றி விபரமமக சொல்லுறன்.]

பீர் போத்தல்கள் சகிதம் நம்மட பெடியளெல்லாம் கடல்ல குளிப்பாங்கள்(நான் அப்ப குடிக்கிறதுக்கு எதிர். . நம்புங்க).காலையில போனா மத்தியானத்துக்கு மேலையும் அங்க இருந்து நிறைய விளையாடுவம்.கடற்கரைத் தென்னமரங்களில இளநீர் புடுங்கிக் குடுடிப்பம், கடற்கரைக் கால்ப் பந்தாட்டம், மல்யுத்தம்,கிறிகெற், கபடி இப்படி விளையாடுறதும் காத்தான்குடியில வாங்கி வந்த சமுசா(உள்ள மாட்டீறச்சி போட்டிரிக்கும்)இறச்சிப் பொரியல், கிழங்கு பொரியல், பாபத் எண்டு சாப்பிடுறது எந்த ஊரிலையும் கிடைக்காதவொன்று.ஒருமுறை நாங்கள் செய்யுறது போல கடற்கரையில ஒரு மகளிர் பாடசாலைப் பிள்ளையளும் பியரடித்த்தாக கதை வந்தது அதுக்கு பிறகு பெடியங்கள் அந்த பாடசாலைப் பிள்ளையள் எல்லாரையும் இதச் சொல்லி பகிடி பண்ணுவாங்கள். இது ஒரு காலாசர சீரழிவெண்டு நாங்களும் பட்டிமன்றத்தில பேசினாங்கள். பத்திரிகையிலையும் இப்பிடியொரு விசயம் நடந்ததாய் கிசுகிசு வில போட்டவனுகள். இப்ப இதை நினைக்க வெட்கமாய் எனக்கு இருக்கு எவ்வளவு மோசமான ஆண் மனோநிலையில் நாங்கள் வளர்க்கப் பட்டிருகிறோம்.என்னைப் போல் அனுபவத்தை அங்கிருந்த ஒரு பெண்ணால் எழுத முடியுமா?கடற்கரையில் பியரடிப்பதும் பின்னர் குளிப்பதும் தவறானது. அது யாராகவிருந்தாலும். அந்தக் கடற்கரையில் எனக்கு தெரிந்து ஆறேழு பேர் கடலில் குளிக்கும் போது இறந்திருப் பார்கள்.முழுநிலா வரும் நாட்களில் எக்கச்சக்க கூட்டம் வரும் நாங்களும் கண்டிப்பக போவம். ஆண்கள் பாடசாலயில் படிக்கும் எங்களுக்கு சக மாணவிகளைப் பார்த்து சிரிப்பதற்காவது கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்.இந்த நேரத்தில் குடும்பம் குடும்பமாக வருவார்கள். நண்பர்களுக்கு காதலியைக் காட்டுவதற்கும் இந்த பொழுதே உதவியது.பெரும்பாலும் பெண்களும் இப்படியே செய்தார்கள்.(சோமிட மாமாவு குடும்பமாய் வாரார்டோய். . . நண்பர்கள் கத்தியது நினைவிருகிறது. )முதல் ஒருகாலத்தில் பிரச்சனை பெரிசா இல்லாத போது இந்த கடற்கரையில் சிறிய ஊணவகம் தங்கும் விடுதி ஒன்று இருந்ததெண்டும் அப்பவெல்லாம் அடிகடி காணிவெல் நடக்குமெண்டும் பெரியாக்கள் சொல்லுவாங்கள். நான் அறிஞ்சு ஆமி காட்டுற காணிவெல்லத்தவிர வேறயேதும் நடக்கையில்ல(?) ஆனால் அந்த கடற்கரைக்கு ஏதோ ஒரு சிறப்பு இருந்தது.மட்டக்களப்பில் நடக்கும் அம்மன் சடங்குகளின் இறுதியில் உருவாடும் தெய்வங்களும், பூசாரிகளும், பொது மக்களும் இங்கு வந்து பூசை நடத்துவது வழமை. தாமரைக்கேணி மாரியம்மன் திருவிழாவின் போது பலமுறை நான் இப்படிப் போயிருகிறேன்.இது தவிர சில ஆகமக் கோவில் சாமிகள் தீர்த்தத் திருவிழவின் போது இங்கு தீர்த்தமாடுவதுமுண்டு.இங்கு ஒரு பகுதியில் மீன்பிடிப்பார்கள் இந்தபகுதி முழுவதிலும் மீன்வாடிகளைப்(மீனவர் ஒYவெடுக்கும் இடம்) பார்க்கலாம்.ஏலேலோ பாட்டு பாடிய படியே கரைவலை போட்டு இழுத்து வருவார்கள் எக்கச்சக்க மீன் படும் அப்ப பக்கத்தில நிண்டா நல்ல மலிவா மீன் வங்கலாம். எனக்கு பிடித்த மான மாப்பிளைக்கீரி மீன் சில காலங்களில் அதிகம் பிடிபடும்(இதை தமிழகத்தில் மத்தி மீன் என்கிறார்கள்.மட்டக்களப்பு நகரத்தில இருந்து மூன்று சோதனைச் சாவடிகளைக் கடந்து கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது என்பது ஒரு சுகமான அனுபவம்.இன்று தொடர்பில் கூட இல்லாத என் நண்பர்கள் பலருக்கும் இன்னமும் இந்த நினைவுகள் இருக்கலாம்இன்று . . ."கடற்கரைக்கு முதல் நாம போன போல இப்ப போறல்லடா அதுக்கு சுனாமி மட்டும் காரணமில்ல அங்க நிக்கக்குள்ள யார் எப்ப எவன கடத்துவானெண்டு தெரியா இப்ப வேலைக்கு போயித்து வந்தா வீட்டுகுள்ள கிடக்குறதான்.எப்பயாவது கடற்கரை எப்பிடியிருகெண்டு போயி பாப்பம். கிழங்குக் கடையளும் குறைஞ்சு போயித்து" என்று எனது நண்பன் நான் போனபோது சொன்னான்.ம்......பெருமூச்சு விட்டபடியே மீண்டும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி கனவுகளுக்காக தூங்குவதைத் தவிர என்னால் என்ன செய்ய முட்யும்.

9 Comments:

At January 2, 2007 at 10:33:00 PM PST , Blogger கானா பிரபா said...

படத்தில் சரிந்து போயிருக்கும் தூபியின் நிலை தான் எம்மக்கள் நிலை

 

At January 4, 2007 at 1:18:00 AM PST , Blogger சோமி said...

நன்றி பிரபா. எங்கள் மனங்களும் இந்தக் க்ட்ற்கரைத் தேவலயம் போலத்தா இருக்கிறது. தொடர்ந்து மட்டக்களப்பின் எனது அனுபங்களை பதியலாமென்றுள்ளேன் நேரம்தான் பிரசனையாக உள்ளது.

 

At January 4, 2007 at 11:01:00 AM PST , Anonymous Anonymous said...

சயந்தன் said...
பீர் போத்தல்கள் சகிதம் நம்மட பெடியளெல்லாம் கடல்ல குளிப்பாங்கள்(நான் அப்ப குடிக்கிறதுக்கு எதிர். . நம்புங்க).

 

At January 4, 2007 at 11:02:00 AM PST , Anonymous Anonymous said...

மலைநாடான் said...
சோமி!

கல்லடியில இருந்த அந்தத்தேவாலயம், ஒரு மீன் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது என நினைக்கின்றேன். நானும் அந்தக் கடற்கரையின் பெளர்ணமி இரவுகளை ரசித்திருக்கின்றேன். கூடவே மட்டுவாவியில் பெளர்ணமி இரவுகளில் பாடும் மீன்கள் பற்றிய எண்ணங்களுடன்..

 

At January 4, 2007 at 11:03:00 AM PST , Anonymous Anonymous said...

இராஜராஜன் said...

நன்றாய் இருந்தது சோமி

நான் இங்கு சென்னை பட்டிணம்தான் ஆனாலும் கடல் எங்கும் கடல்தானே

எனக்கும் யென் கடல் ஞாபகம் வந்தது

நன்றி

 

At December 3, 2007 at 4:48:00 PM PST , Blogger Ullathu Ullapadi said...

நான் சென்றிராத மட்டக்களப்பின் அழகை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள. தொடர்ந்தும் மட்டக்களப்புத் தொடர்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

Manivasahan

 

At December 3, 2007 at 4:48:00 PM PST , Anonymous Anonymous said...

நான் சென்றிராத மட்டக்களப்பின் அழகை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள. தொடர்ந்தும் மட்டக்களப்புத் தொடர்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

 

At September 17, 2008 at 7:42:00 PM PDT , Anonymous Anonymous said...

The fish church located near Kallady Bridge. The church in the picture located near the Sea.

Thanks Somi for remiding me the time we spend on that beach with kilanku & Babath. sometimes we use to run from kallady to navaldi along the beach.

Mano

 

At September 17, 2008 at 8:47:00 PM PDT , Blogger சோமி said...

நன்றி மனோ, மட்டக்களப்பின் அந்த நாட்க்களின் அருமை புதுப்புது தெருக்களில் ஊர்களில் அலைகிறபோதுதான் தெரிகிறது.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home